பாகிஸ்தானுக்குக் கடினமான இலக்கை அளித்த இலங்கை.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

2-வது டெஸ்ட், காலேவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 378 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமல் 80 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 88.1 ஓவர்களில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சல்மான் 62 ரன்கள் எடுத்தார். ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்கள் முன்னிலை பெற்றது. 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

கருணாரத்னே 27, தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். மேத்யூஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 323 ரன்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இலங்கை அணி இன்று சிறப்பாக விளையாடி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கருணாரத்னே 61, தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன்கள் எடுத்தார்கள்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற 508 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி கடைசி நாளில் 419 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். இமாம் உல் ஹக் 46, பாபர் ஆஸம் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் 2-வது டெஸ்டை இலங்கை அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.