ரூ. 60க்கு விற்பனையாகும் கோழிக்கறி… உச்சத்தைத் தொடும் கோதுமை… காரணம் என்ன?

இந்தியாவில் இந்துக்களின் தூய்மையான மாதம் என அழைக்கப்படுவது ஆடி மாதம். இந்த மாதங்களில் விரதம் இருப்பது , கோவில்களுக்குச் செல்வது , அசைவ உணவை தவிர்ப்பது , கடவுளை வழிபடுவது என ஆடி மாதம் இந்துக்களின் மாதமாக விளங்குகின்றது. இந்த மாதத்தில் மிக முக்கியமானது முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதிக் கொடுக்கும் ஆடி அமாவாசை . தென் இந்தியாவில் ஆடி என தமிழில் அழைப்போம். வட இந்தியர்கள் ஷ்ராவண மாதம் என அழைப்பர். கங்கையிலிருந்து, ”காவட்” மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் சிவன் கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு வழக்கம்.

உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகலேஷ்வர் கோவில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில் மற்றும் டெல்லியில் உள்ள கவுரி ஷங்கர் கோயில் வரனசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் உள்ளிட்ட சிவன் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் நின்று வழிபாடு செய்வார்கள். வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த15 நாட்களில் கோழிக்கறி விலை பாதியாக சரிந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிலோ கோழிக்கறி விலை 115 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ. 60 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் தட்பவெட்ப நிலை மற்றும் பண்டிகைக் காலங்களின் தேவை போன்றவற்றைக்கருத்தில் கொண்டு கோழி, முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. இதோடு மக்களும் ஆடி மாதங்களில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். தற்போது வடஇந்தியாவில் ஷ்ராவண மாதம் மற்றும் தமிழகத்தில் ஆடி மாதம் என்பதால் பலர் அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைக் கைவிடுவார்கள். இந்நாள்களில் இறைச்சி விற்பனையை மட்டும் நம்பியிருப்பவர்கள் அம்மாதம் மட்டும் வேறு தொழிலை நோக்கி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் ஆடி மாதம் எப்படி கடைபிடிக்கப் படுகின்றதோ அதே போன்று வட இந்தியர்கள் ஆடி மாதம் வழிபாடு, விரதம் என அசைவ உணவை தவிர்ப்பதால் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிலோ கோழிக்கறி விலை 115 ரூபாயாக இருந்த நிலையில் கடந்த 15 நாள்களில் விலை குறித்து தற்போது ரூ. 60 ஆக விற்பனையாகிறது.

இதனால் கோழி வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதோடு விலை சரிந்துவரும் நிலையில், அதிக எடையுடன் உள்ள கோழிகளை விற்பனை செய்யவும் உரிமையாளர்கள் முன்வந்துள்ளதாக கோழி வளர்ப்போர் சங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜுன் மாதம் உணவுப்பொருள்களின் விலை உயர்வின்,போது இறைச்சி மற்றம் முட்டையின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் இந்த விலை உயர்வின் காரணமாக இறைச்சி போன்றவற்றை வாங்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் இந்த கோழிகளின் விலை சரிவு கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் முட்டை, கோழியின் விலை சரிந்துவரும் நேரத்தில், வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

மேலும் இந்தாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. கோதுமையின் கையிருப்பும் குறைந்துவிட்டது. இதோடு உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதன் காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81 சதவீதமாக உள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் கோதுமையின் சில்லறை பணவீக்கம் 7.77 சதவீதத்தை எட்டியது.. இந்த விலையேற்றத்தால் பேக்கரி ரொட்டி, மற்றும் கோதுமை சார்ந்த உணவுப் பண்டங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் வட இந்தியாவில் ஆலையில் விநியோகிக்கப்படும் கோதுமையின் விலை சென்ற மாதம் ஒரு குவிண்டால் ரூ 2,260 முதல் 2,270 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2,300 முதல் ரூ. 2,350 ஆக உயர்ந்துள்ளது. பெரிய நிறுவனங்களும், வியாபாரிகளும் தங்கள் இருப்புகளை வைத்திருப்பதால் கோதுமையின் விலை உயரும் என வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்தாண்டு முதல் முறையாக அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக்கழகத்தில் கோதுமையும் ஆலைகளுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.