செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 8
எண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப்
சிறிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது )
பூண்டு – 6 (நசுக்கியது )
தக்காளி – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (துருவியது)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
புளிச்சாறு – 1/4 கப்
தூள் வெல்லம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு

தண்ணீர்

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மசாலா பேஸ்ட்

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 3 தேக்கரண்டி
புளிச்சாறு – 3 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்

செய்முறை

ஒரே அளவிலான ஆறு கத்திரிக்காய்களை எடுத்துக்கொள்ளவும். கத்திரிக்காயை காம்புடன் சேர்த்து மையத்திலிருந்து நாலு பாகங்களாக வெட்டவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். தயாரான மசாலா பேஸ்ட்டை வெட்டிவைத்துள்ள கத்திரிக்காயின் உள்பகுதிகளில் தடவ வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும். அடுத்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி, துருவிய தக்காளி ஆகியவற்றை கலக்கவும். அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். கொதிகின்ற குழம்பில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு மூடிய நிலையில் சமைக்கவும். கடைசியாக சிறிது தூள் வெல்லத்தை சேர்க்கவும். சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்

Leave A Reply

Your email address will not be published.