சரத் ​​பொன்சேகாவின் அழைப்புக்கு அரகலய போராளிகளின் எதிர்ப்பு

சரத் ​​பொன்சேகாவின் 9ம் திகதி போராட்ட அழைப்புக்கு அரகலய போராளிகள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

‘அனைத்து கட்சி போராளிகள்’ வெளியிட்டுள்ள அறிவிப்பு ‘

போராட்டத்தின் வெற்றிகளையும், போராட்டக்காரர்களையும் பாதுகாப்போம்…!!

வெற்றிகரமான பொதுப் போராட்டத்தின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் இந்நாட்டு மக்கள் பெற்ற வரலாற்று அரசியல் வெற்றிகள் உலகின் ஏனைய அரசியல் வெற்றிகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது மற்றும் முழுமையானது என அனைத்துக் கட்சிப் போராளிகளாகிய நாங்கள் நம்புகிறோம்.

இத்தகைய தனித்துவமான பொதுப் போராட்டத்தின் மூலம், நமது சமூகம் கவிழ்க்க முயன்ற , அதே தோல்வியடைந்த ஆட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அதே ஆட்சிமுறையே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

ஆனால் அந்த காலாவதியான முறையை மீண்டும் உருவாக்கி பேண வேண்டிய தேவை இலங்கை மக்களுக்கு இல்லை, இதுவரை காலமும் போராட்டத்தின் மூலம் நாடு கோரிய மாற்றத்தை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டதாகவோ அல்லது அதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதையோ நாம் பார்க்கவில்லை.

அதே சமயம், போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டக்காரர்களை குறிவைத்து அரசு அடக்குமுறையை ஏவுவதும், ‘சதி பயத்தை’ பஞ்சாயுதமாகப் பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகள், ‘சதி’யை உருவாக்குவதும் வேடிக்கையாக உள்ளது.

சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி செயற்பாட்டாளர்கள் மீதான சட்டவிரோத அழுத்தங்களையும் சட்டரீதியான சோதனைகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகிறோம். குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளை மட்டுப்படுத்தி தடுக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஊடகச் செயற்பாடுகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தி பொதுக் கருத்தினை நீருக்குள் ரப்பர் பந்தினை மூழ்கடிக்க முயல்வது போன்ற முயற்சிகள் எமது தாய்நாட்டை இன்னொரு இருண்ட யுகத்திற்கு இழுத்துச் செல்ல வழி வகுக்கிறது. எனவே, ஆட்சியாளர்கள் போராட்டத்தின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்தாத பட்சத்தில், அதை ஒடுக்கும் பணியில் ஈடுபடாமல், அனைத்துக் கட்சிப் போராளிகள் என்ற வகையில், அத்தகைய ஒடுக்குமுறைக்கான அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க, சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

மேலும், செயற்பாட்டாளர்களை குறிவைத்து நடத்தப்படும் அடக்குமுறையின் போது, ​​காலிமுகத்திடல் போராட்ட களமும் போராட்டத்தின் பொறிமுறையும் பல்வேறு கட்சிகள், குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பலியாகும் அபாயம் இருப்பதையும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு தெளிவான வாய்ப்பு இருப்பதையும் நாம் அவதானித்துள்ளோம். அந்த நிலைமைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து இதுவரை பெற்ற வெற்றிகளையும் அதன் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு இப்போராட்டத்தின் முதல் கட்டப் போராட்டத்தை முடிக்க அனைத்துப் போராளிகளும் தந்திரோபாயமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ள பொதுப் போராட்டத்தின் உண்மையான இலக்கை அடைவதற்கு, பரந்த மக்கள் ஒற்றுமை உருவாக்கத்தின் மூலம் மக்களை வெற்றிகொள்ளும் ஒரு சக்தியை ஜனநாயக ரீதியாக உருவாக்குவதன் மூலம் நாட்டிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி முடிவை இந்த தருணத்தில் ஏற்படுத்த முடியாது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

மேலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ‘போராட்டத்திற்கு நாட்களைக் நிர்ணயித்தது’ என்பது இந்த அரசாங்கத்தின் சதிகளின் மற்றுமொரு நீட்சியாகும். இது போராளிகளை ஆபத்தில் தள்ளுவதாகும்.

எனவே, தனி மனித போராட்டமாக அல்லாது , பொது மக்களது போராட்டத்தை வெற்றிகரமான திட்டங்களின் மூலம் மீண்டும் தொடங்கும் வரை, உங்கள் ஆட்சியாளர் மீது விழிப்புடன் இருக்குமாறும், பொய்யான சோதனைகளில் சிக்கி, போராட்டத்தின் மீதான உங்களின் நம்பிக்கையைக் குலைக்காமல் இருக்குமாறும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விரைவில் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைகள் போல், பொதுப் போராட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும், சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளுடன் கைகோர்க்குமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

– அனைத்து கட்சி போராளிகள்

Leave A Reply

Your email address will not be published.