கோட்டாபயவுக்குச் சிங்கப்பூர் அரசு எந்தச் சலுகையும் வழங்கவில்லை மீண்டும் உறுதிப்படுத்தியது வெளியுறவு அமைச்சு.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு, எந்தச் சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் எழுத்துபூர்வமாக இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

“பொதுவாக, சிங்கப்பூர் அரசு முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை” – என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச, தனிப்பட்ட பயணமாக கடந்த ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூர் வந்தடைந்தார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு முன்னர் கூறியது.

தனது குறுகிய கால வருகை விசாவை நீடித்த நிலையில் அவர் ஆகஸ்ட் 11ஆம் திகதி சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.