நாவலப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளம்: பல வீடுகள் பாதிப்பு!

இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் பலத்த காற்று காரணமாகவும்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகபிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களும் நீரில் முழ்கியுள்ளன.

மழை காரணமாக இப்பகுதியில் பல வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தால் வெள்ள நீர் இவ்வாறு பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 350ற்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.