நல்லூர் கந்தன் கொடியேற்றம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு அந்தண சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் இசைக்க, தவில் நாதஸ்வரம் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 11ஆம் திகதி திருமஞ்சத் திருவிழாவும், 19ஆம் திகதி திருக்கார்த்திகை உற்சவமும் , 23ஆம் திகதி காலை மாம்பழத்திருவிழாவும், 24ஆம் திகதி சப்பரமும், 25ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 26ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.