பொன்சேகாவால் SJBக்குள் சிக்கல்?

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் நடவடிக்கைகளில் இருந்து , அதன் பிரதித் தலைவர் சரத் பொன்சேகாவை தற்காலிகமாக ஒதுக்கி வைக்குமாறு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அக்கட்சியின் உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகா கடந்த காலங்களில் கட்சித் தலைமையை மீறி கட்சியின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாகச் செயற்பட்டமையே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்கான காரணம் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் ஒழுக்கம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், கட்சியின் ஒழுக்கம் மற்றும் கொள்கைகளை மீறும் வகையில் பொன்சேகாவின் நடத்தை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எம்பிக்கள் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சரத் பொன்சேகா காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக நெருக்கடி உருவாகி வருவதாகவும், கட்சித் தலைமை ஒற்றுமையை பேணி முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் பொன்சேகா தெரிந்தே உள் மோதலைத் தூண்டி விடுகிறார் என்றும் அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.