ரணில் பக்கம் சாயும் டலஸ் அணி – அமைச்சுப் பதவிகள் வேண்டாமாம்.

“சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுகொள்ளமாட்டோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்கள் கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன்போதே ‘மொட்டு’க் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“மக்கள் நலன்சார்ந்து அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளை ஏற்பதற்குத் தயாரில்லை” என்றும் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.