சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல நடுவர் ரூடி கோர்ட்ஸென் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென். 1992-ல் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் முதல்முறையாக நடுவராகப் பணியாற்றினார். மூன்று வாரங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவராக அறிமுகமானார்.

அந்த டெஸ்டில் தான் முதல்முறையாக ரன் அவுட்டுக்கு 3-வது நடுவர் பயன்படுத்தப்பட்டார். 331 சர்வதேச ஆட்டங்களுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார் ரூடி கோர்ட்ஸென். மெதுவாக இடது கையை உயர்த்தி பேட்டர்களுக்கு அவர் அவுட் கொடுக்கும் விதம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 18 வருடங்கள் நடுவராகப் பணியாற்றிய பிறகு 2010-ல் நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் 73 வயது ரூடி கோர்ட்ஸென், கார் விபத்தில் பலியாகியுள்ளார். கோல்ப் போட்டியில் பங்கேற்றுவிட்டு கேப் டவுனிலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரூடி கோர்ட்ஸென் பலியானதாக அவருடைய மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

ரூடி கோர்ட்ஸெனின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.