தேவாலயத்தில் தீ: 15 குழந்தைகள் உட்பட 41 பேர் பலி 55 பேர் காயம்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 15 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.