பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி..!

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரண்ட்போர்ட் அணி முதல் பாதியில் 4 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.அதன்படி அந்த அணியின் ஜோஷ் தசில்வா (10வது நிமிடம் ), மதியாஸ் ஜென்சன் (18வது நிமிடம் ),பென் மீ (30வது நிமிடம் ), பிரையன் எம்பியூமோ (35வது நிமிடம் ) கோல்கள் அடித்தனர்.

பின்னர் நடைபெற்ற 2வது பாதியில் மான்செஸ்டர் அணி பதிலடி கொடுக்க முயற்சித்தும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கணக்கில் பிரண்ட்போர்ட்அணி வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.