புலம்பெயர் தமிழ் அமைப்புகளது தடை நீக்கமும் , புலம்பெயர் சிங்களவர்களது தடையும்

இதுவரை தடை செய்யப்பட்டிருந்த 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 318 பேர் மீதான தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையில் இருப்பவர் ஈழ போரில் ஈடுபட்ட முன்னைய ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்).

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவியமை மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தமை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த டயஸ் பொர அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களாகும்.

இந்த அமைப்புக்களில் பல கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தடை செய்யப்பட்டன, மேலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தடையை தொடர வேறு பல அமைப்புகளது பெயர்களும் சேர்க்கப்பட்டன.

இவை பயங்கரவாத அமைப்புகளா?

அந்த நேரத்தில் கூட, இந்த அமைப்புகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவோ தெளிவான தகவல் இல்லை. ஆனால் சிங்கள பௌத்த மக்களின் தேர்தலின் பின்னணியில் இனவாத அடிப்படையில் இந்த அமைப்புகளின் தடையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று என்பதும் அதற்கு விசுவாசமாக இனவாதமாக செயற்பட வேண்டிய நிலைக்கு கோட்டாபய ஆட்சி தள்ளப்பட்டது என்பதும் உண்மைக்கு மிக நெருக்கமான தகவலாகும்.

எவ்வாறாயினும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் தீவிரம் காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக நாட்டில் உள்ள டயஸ் பொரா தடையை நீக்கி அந்த குழுக்களை முதலீட்டில் பங்குபெறச் செய்ய கடந்த மார்ச் மாத இறுதியில் தீர்மானித்திருந்தார்.

புலம்பெயர் சிங்களவர்களோ அல்லது வெளிநாட்டு ஊழியர்களாக பணிபுரியும் மக்களோ இலங்கைக்கு அந்நிய செலாவணியை அனுப்புவதை தவிர்த்து வருவது இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த ஒரு சம்பவமாகும்.

இன்றும் இவர்கள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் ஒரு நடைமுறைப்படியே வேலை செய்கிறார்கள். அதற்கிணங்க இலங்கையின் புதல்வர்களாகிய தமிழ் மக்கள் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக கை கொடுக்க முன்வருவது இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய நிலையாகும்.

15 டிரிலியன் ரூபாய் முதலீடு

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் அபிவிருத்திக்காக 15 டிரிலியன் ரூபாவை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இலங்கையில் புலம்பெயர் தமிழர்களின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிமலன் விஸ்வநாதன் ஏப்ரல் 12ஆம் திகதி பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புலம்பெயர் தமிழ் முதலீடுகள் மீதான விருப்பம் மார்ச் மாதம் அழைக்கப்பட்ட பல கட்சி மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பின் போது, ​​நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக பணத்தை முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கேட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்தார். , ஆனால் அதை செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகள் சிக்கலானது என சுட்டிக்காட்டிய ஆளுநர், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் உதவி கோரியதாக ஊடக செய்தியாக வெளியானது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனும் அமைச்சரவைக்குள்ளும் கலந்துரையாடப்பட்டது.

தடையை நீக்க சர்வதேச சமூகத்திற்கு ஒரு வாக்குறுதி

அந்த கலந்துரையாடல்களின் விளைவாக, நாட்டில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளாக தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கம் தயார் என ஜூன் 13 அன்று சர்வதேச சமூகத்திற்கு அறிவித்தது.

“2012 ஆம் ஆண்டின் ஐ.நா. ஒழுங்குமுறை எண். 1ன் கீழ், நியமிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மதிப்பாய்வில் உள்ளது.

இதுவரை 318 நபர்கள் மற்றும் 04 உரிமைகோரல்களை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக செய்யப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது வழமையான அமர்வில் ஜூன் 13ஆம் திகதி ஜெனிவாவில் உரையாற்றும் போதே இலங்கையின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர் சமூகம் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புகளுடன் ஈடுபடுவதற்கு இலங்கை தன் வாசல்களை திறந்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள்

மார்ச் 2021 இல், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சக்திவாய்ந்த அமைப்புகள் உட்பட பல புலம்பெயர் தமிழ் குழுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை (ATC), கனடியத் தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளன.

அவற்றுள், சில குழுக்கள் 2012 ஆம் ஆண்டின் ஐ.நா. ஒழுங்குமுறை எண். 1 (4) இன் கீழ் 2014 இல் தடை செய்யப்பட்டன, ஆனால் அவை 2015 இல் அரசாங்கத்தால் மீண்டும் பட்டியலிடப்பட்டன. 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன கையொப்பமிட்டுள்ளார்.

இந்த தடை செய்யப்பட்ட பட்டியலில் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, மலேசியா மற்றும் பல நாடுகளில் வசிக்கும் பலரை அரசாங்கம் சேர்த்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக 15 அமைப்புகளும் கிட்டத்தட்ட 300 பேரும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 03 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தாருல் அதர் அல்லது aka Jamiul Adar, மோஸ்க் அல்லது aka Dharul Adar Quran Madrasah aka Darul Adar, Sri Lanka Islamic Students Association aka Jamia மற்றும் Save the Pearls aka Save the Pearl Society ஆகியவை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மிகவும் பாதிப்பை உருவாக்கிய புலம் பெயர்ந்த சிங்களவர்கள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற சந்தேகத்தினாலேயே தடை செய்யப்பட்டன என்று நீங்கள் நினைத்தால், நாட்டிற்கு அந்நியச் செலாவணியை அனுப்பாமல் இருந்ததன் மூலம் புலம்பெயர் சிங்களவர்கள் செய்த சேதம் புலிகள் அமைப்பினர் நாட்டிற்கு ஏற்படுத்திய சேதத்தை விட மிக மோசமானது. அன்று பாரிய யுத்தத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இருந்த போது கூட நாட்டை வங்குரோத்து நிலைக்கு செல்லாத தள்ளாத போது , இன்று திவாலாவதற்கு புலம்பெயர் சிங்களவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

புலம்பெயர் சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியை வழமையான முறைகள் மூலம் அனுப்பினால், மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு கிடைக்கும். இன்று அது $300 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. வெளிநாட்டுப் பணம் முறையாகப் பெறப்பட்டால், இன்று நாட்டு மக்கள் எதிர்நோக்கும் எரிபொருள், உணவு, மருந்து, போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கும் அளவுக்கு அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கும்.

(இந்த புகைப்படம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் மார்ச் (25) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.)

Leave A Reply

Your email address will not be published.