ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஹட்டன், மல்லியப்புப் பகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, சாமிமலை பகுதியைச் சேர்ந்த சிவனு கன்னியப்பன் (வயது – 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலே மோதியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.