தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புதன்கிழமை முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை ஸ்டூவா்ட் பிராட் 15, ஜேக் லீச் 15, ஜேம்ஸ் ஆண்டா்சன் 0, ஆலி போப் 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இறுதியில் மேத்யூ பாட்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ககிசோ ரபாடா 3, மாா்கோ யான்சென் 1 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, இன்றய நாள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சோ்த்திருந்தது.

ராஸி வான் டொ் டுசென் 19, மாா்கோ யான்சென் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கேப்டன் டீன் எல்கா் 47, சாரெல் எா்வீ 6 பவுண்டரிகளுடன் 73, கீகன் பீட்டா்சன் 24, எய்டன் மாா்க்ரம் 16 ரன்கள் சோ்த்தனா்.
இங்கிலாந்து பௌலிங்கில் பென் ஸ்டோக்ஸ் 3 ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜேக் லீச், மேத்யூ பாட்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.