அடுத்த வாரம் கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கைக்கு திரும்புகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் CNN தொலல்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர் தாய்லாந்துக்கும் பயணமானார்.

முன்னாள் ஜனாதிபதியின் விஜயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித பங்கும் இல்லை எனவும், இலங்கை பிரஜை என்ற வகையில் அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சி.என்.என்.க்கு மேலும் தெரிவித்துள்ளார்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    திருடன் வருகிறான் திரும்ப திருடுவதற்கு

Leave A Reply

Your email address will not be published.