கனடாவில் இருந்து இலங்கை வந்தவரை காணவில்லை !

கடந்த யூன் மாதம் 11ம் திகதி கனடாவில் இருந்து இலங்கை வந்த குருமூர்த்தி மயில்வாகனம் என்பவரை, கடந்த 17ம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குருமூர்த்தி மயில்வாகனம் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

வயது 74, நீல நிற சாரம், நீல நிற பனியன் அணிந்திருந்தார். சுமார் 5 அடி 9 அங்குல உயரமும் பொது நிறமும் நரைத்த தலை முடியுடைய இவருக்கு உச்சியில் வழுக்கை உண்டு

இவரைப் பற்றிய தகவல் ஏதும் அறிந்தவர்கள் தயவு செய்து கீழே தரப்பட்டிருக்கும் தொலைபேசிகளுக்கு அழைத்து விபரங்களைத் தந்துதவுமாறு அவரது குடும்பத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

075 3996654,
077 4206565,
077 0780778

Leave A Reply

Your email address will not be published.