ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு.

அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர்கொண்ட குழாத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்த அதிகமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக செயற்படவுள்ளதுடன், உப தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
அதேநேரம் விக்கெட் காப்பாளர்களாக குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் அகியோருடன் பானுக ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி விக்கெட் காப்பாளர் என கருதப்படும் நிரோஷன் டிக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவுஸ்திரேலிய தொடரிலிருந்து முக்கிய மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இலங்கை குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர்களான கசுன் ராஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தாலும், உபாதை காரணமாக இவர்கள் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக பிரமோத் மதுசான் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணியிலிருந்து சில வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், தனன்ஜய டி சில்வா மீண்டும் T20I அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவருடன், இறுதியாக நடைபெற்ற SLC அழைப்பு T20 தொடரில் பிரகாசித்திருந்த அஷேன் பண்டார, புதுமுக வீரர் டில்ஷான் மதுசங்க மற்றும் அவுஸ்திரேலிய தொடரிலிருந்து உபாதை காரணமாக வெளியேறிய மதீஷ பதிரண ஆகியோர் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளனர்.

இலங்கை அணி அறிவித்துள்ள குழாத்தை பொருத்தவரை 8 துடுப்பாட்ட வீரர்கள், 5 சகலதுறை வீரர்கள், 5 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 முதன்மை சுழல் பந்துவீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்
துடுப்பாட்ட வீரர்கள் – பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, குசல் மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால்
சகலதுறை வீரர்கள் – தசுன் ஷானக (தலைவர்), அஷேன் பண்டார, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன
வேகப்பந்துவீச்சாளர்கள் – டில்ஷான் மதுசங்க, மதீஷ பதிரண, துஷ்மந்த சமீர , பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ
சுழல் பந்துவீச்சாளர்கள் – மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, ஜெப்ரி வெண்டர்ச

Leave A Reply

Your email address will not be published.