பயங்கரவாத தடை சட்டம் மோசமான ஒரு சட்டம் : மகாஜன சங்க இந்து குருக்கள். (Video)

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத சட்டம் மக்களின் சுமூக வாழ்வை பாதிக்கிறது என மகாஜன சங்க குருக்கள் சர்மா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையத்துக்கு சென்று அனைத்து மத தலைவர்களோடு புகார் அளித்து விட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு மகாஜன சங்க குருக்கள் சர்மா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது ,

இன்று நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டம் ஒரு மோசமான சட்டம். அரகலயவில் ஈடுபட்டுள்ளோர் மக்களின் துயரத்திலும் , வேதனையிலும் சிக்கியுள்ள நிலையில் , தற்போதுள்ள பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்காகவே குரல் கொடுப்பதாக குறிப்பிட்ட அவர்,

இந்த அரகல போராட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை கலந்து கொண்டார்கள். அமைதியான அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நாட்டை நேசிப்பவர்களே தவிர , அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. எனவே இந்த பயங்கரவாத சட்டத்தை அகற்றி மக்களின் சுமூகமான வாழ்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என மகாஜன சங்கதினரான நாங்கள் அனைத்து மத தலைவர்களோடு இணைந்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளோம். இந்த பயங்கரவாத சட்டம் நமது நாட்டுக்கு கெட்ட பெயரையே பெற்று கொடுக்கும்  என இந்து மத குருவான சர்மா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.