யாழில் பொலிஸில் முறைப்பாட்டை மீளப்பெறச் சென்றவர் சாவு.

யாழ்., வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மீளப் பெறச் சென்றவர் மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பரமேந்திரம் ரஜீவ்குமார் (வயது – 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அராலிப் பகுதிக்குக் கனடாவிலிருந்து விடுமுறையில் ஒரு தம்பதியர் வந்திருந்தனர். இதன்போது அவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடு எழுந்தது.

இந்தநிலையில் கனடாவில் இருந்த வந்த பெண்ணின் தந்தையார் கொழும்பிலிருந்து வருகை தந்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தனது மகள் முறைப்பாட்டைச் செய்தார்.

இதையடுத்துக் குடும்ப முரண்பாடு சுமுகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில் தனது மகள் மற்றும் மருமகனுடன் கொழும்புக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்து குறித்த பெண்ணின் தந்தை முறைப்பாட்டை மீளப்பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுச் சென்றபோது, அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக 1990 அம்புலன்ஸ் ஊடாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் இடைநடுவில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.