இலங்கை வீரர்களை சமாளிக்க முடியாமல் படாதபாடுபட்ட பாகிஸ்தான்; சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே 71* ரன்களும், ஹசரங்கா 36 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.