இந்தியாவிடம் இருந்து போர் கப்பல்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வாங்க வங்கதேசம் திட்டம் !!

வங்கதேச அரசு இந்தியாவிடம் இருந்து பல்வேறு வகையான ராணுவ வாகனங்கள் மற்றும் பல வகையான போர் கப்பல்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அது சார்ந்த பட்டியலை இந்திய அரசுடன் பகிர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேச தரைப்படை தனது மூத்த அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக சில நூறு Mahindra XUV 500 வாகனங்கள், ஐந்து BLT-72 Bridge Layer Tank பாலம் அமைக்கும் வாகனங்கள், 11 கவச வாகனங்கள் மற்றும் 7 பெய்லி பாலங்கள்

மேலும் டாங்கிகள் போன்றவற்றை மீட்க உதவும் கனரக மீட்பு வாகனங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு பணிஙளை மேற்கொள்ள உதவும் கவச வாகனங்கள், தலை கவசங்கள் ஆகியவற்றையும் வாங்க விரும்புகிறது.

அதே போல் வங்கதேச கடற்படை தனது பயன்பாட்டிற்காக சப்ளை கப்பல், எண்ணெய் கப்பல், ஆழ்கடல் செல்லும் திறன் கொண்ட கப்பல்களை இழுக்கும் இழுவை படகு, Floating Dock எனப்படும் கப்பல்களை சுமக்கும் மிதவை தளம் ஆகியவற்றை வாங்கவும் இந்திய உதவியோடு கப்பல்களை வங்கதேசத்தில் கட்டமைக்கவும் விரும்புகிறது.

இவை அனைத்தையும் வங்கதேச அரசு இந்திய அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இவற்றை Line Of Credit முறையில் இந்திய நிதி உதவியையும் பெற்று கொள்ள விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.