மைத்திரியைத் தனிமைப்படுத்தி துமிந்தவும் அமைச்சராகுகின்றார் – வஜிரவுக்கும் அமைச்சுப் பதவி.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் போது துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

எதிர்வரும் நாட்களில் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இவர்களைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.