யாழில் பெண் சிசு பால் புரைக்கேறி பரிதாப மரணம்!

பிறந்து நான்கு நாள்களேயான பெண் சிசு ஒன்று பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

இந்தச் சோகம் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கே நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி பிரசவம் நடந்த நிலையில், தாயும் சிசுவும் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணியளவில் பால் கொடுத்து விட்டு தாய் அந்தப் பெண் சிசுவை உறங்க வைத்துள்ளார். இரவு 9 மணியளவில் சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பால் புரைக்கேறியே சிசு உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.