புதிய தீர்மானம் தொடர்பில் அலட்டிக்கொள்ளவேண்டாம்! – அரசை மீறி எதுவும் நடக்காது என்கிறார் ரணில்.

“ஜெனிவாச் சவாலை நாம் இலகுவாக முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணை தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசை மீறி நாட்டுக்கு எதிராக எதுவும் நடைபெற சந்தர்ப்பம் இல்லை. இந்நிலையில், அவ்விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடும்போது அரசு என்ற ரீதியில் மிகவும் அவதானமாக இருங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலண்டன் செல்வதற்கு முன்னர் அரசின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

“ஜெனிவா நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசைக் குறைகூறி எந்தப் பயனும் இல்லை. அந்தக் காலப் பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை. அந்த விடயத்தில் நல்லாட்சி அரசு வெற்றியும் கண்டுள்ளது.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ தூண்டும் வகையில் எவரும் கருத்துக்களை வெளியிடாதீர்கள்” என்று ஜனாதிபதி ரணில் மேலும் கூறினார் என்று தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.