கிரீன் அதிரடி: இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் அடித்தனர். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பரபரப்பான கடைசி கட்டத்தில், டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.