பாராளுமன்றத்தில் ஊடகவியளார்கள் உண்ணும் உணவில் சாக்கு நூல்.

இன்று ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் சாக்கு நூல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு அடி நீளம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பத்திரிகையாளர்கள் சாப்பிட மறுத்து சாப்பாட்டு துறை தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட சில உணவுகள் பழுதடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதன் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக சுகவீனமடைந்து பாராளுமன்ற வைத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்ற பின்னர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.