ரணிலை பதவியில் இருந்து அகற்றுவதே தமது நோக்கம் : மாணவர் செயற்பாட்டாளர்கள்

சோசலிச மாணவர் ஒன்றியம் நேற்று (24) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் 42 பேர் இன்று பிற்பகல் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றுவதே தமது நோக்கம் எனவும் அங்கு மாணவர் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உட்பட 83 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.