யார் இந்த இலங்கை கலைஞர் தர்ஷன்? I பூதவுடல் இறக்குவானைக்கு ….

கொழும்பிலிருந்து இன்று (03) மாலை இறக்குவானை பகுதியிலுள்ள அவர் ஊரிலுள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று முதல் நாளை மறுதினம் (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் வீட்டில் வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் எதிர்வரும் 5ம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

தர்சன் தர்மராஜ்  : Darshan Dharmaraj : දර්ශන් ධර්මරාජ්

2 மார்ச் 1981 ல் பிறந்த தர்சன் , இரத்தினபுரி மாவட்டத்தின் இரக்குவானையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

தர்சன் ,  2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி தனது 41 ஆவது வயதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாரடைப்பினால் மரணமடைந்தார்.

இலங்கைத் திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகரும், ஓவியரும் ஆவார்.

இவர் சிட்னி சந்திரசேகராவின் ஏ9 என்ற சிங்களத் தொலைக்காட்சி நாடகம் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.
ஆரம்ப வாழ்க்கை

தர்சன் ,  இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை என்ற ஊரில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் பிறந்தார்.

அங்குள்ள சென் யோன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.

தந்தை தர்மராஜ் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்டார்.

பள்ளிக்க்கூடத்தில் நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

தந்தை இறந்தபிறகு, இவர் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்பட்டன. இதனால் வேலை தேடி கொழும்பு வந்தார். தொடக்கத்தில் மூட்டை சுமக்கும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

நடிப்புப் பணி

பிரபல சிங்கள இயக்குநர் சிட்னி சந்திரசேகராவின் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அவரது கண்களில் பட்டது. அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வின் மூலம் நடிப்பதற்குத் தெரிவானார்.

2008 ஆம் ஆண்டில் இந்நாடகம் ஒளிபரப்பானது. சிங்கள மொழியில் அப்போது சரளமாகப் பேசாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டார்.   தொடர்ந்து பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம, பூதி கீர்த்திசேன ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன.

2008 ஆம் ஆண்டில் பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றின் மூலம் சிங்களத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான உபெர்ட்டோ பசோலினியின் மச்சான் (2008) என்ற சிங்கள/ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் 2008 முதல் 2010 வரை பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.

 A9 highway

The call to join them on the newly re-opened A9 highway is by Young Asia Television, a call made via the highly popular media device of teledrama that keeps Lankans captivated come night, despite turbulent politics and bizarre happenings and ominous prophesies that doomsday is near.

Literary cum cinematic presentations of the horrendous spectre of war that continues to plague human civilization usually deal with missiles and mortars with war planes that soar high like birds of death with processions of grey uniform clad soldiers marching in thousands in hard boots. an aspect that is marginalized in this grisly scenario is the most significant i.e. the impact that war has on the lives of the average man and woman and child.

Of course it has to be admitted that many a Lankan producer has been cognizant of this aspect and has produced a few remarkable pieces but Take this road bursts on us with a difference.

It all happens on and around the highway, the A9 road running from Colombo to North, to be more specific. And what makes it more boldly novel is that three families of the three major communities i.e. Sinhala and Tamil and Muslim, are involved in the tragic events staged on this highway, events that are highly thought-provoking too.

The Sinhala family is on a visit to Nagadipa very optimistically travelling to materialize a long felt wish to worship in this revered sanctum on a sequestered island. The Tamil family subject to trauma is domiciled in Jaffna while the Muslim family has plans to go back along the road to re-settle where they once were.

What actually happens to them is of less importance and need not be recounted in detail in the larger backdrop of the issues involved.

The greater and envisaged purpose is to open the eye of those concerned on the complexities of the ethnic conflict and to the need of promoting the values of mutual understanding, and mutual co-operation among communities and the need for reconciliation among them.

Award winning artiste Asoka Handagama, who has already made a name for his bold approaches and experimental styles, was picked by YA TV to direct this film. The film’s location is actually the roads and landscapes of Jaffna and the rather unusual fact is that the director and his staff have not encountered any problems with regard to shooting with either the Army or the LTTE.

What is even more remarkable is that the Tamil actors and actresses of the cast had been inhabitants of Jaffna drawn from the local professional actors and actresses.

“I wouldn’t go that far to say that I am pro-LTTE” says Handagama. But I am known for my sympathies with the Tamil cause and have always championed “unconditional ceasefire.”

This may in a good measure account for the complete absence of any sabotage by the LTTE’s during the shooting of the teledrama. We were using local professionals, Tamil ethnically in our caste and objection could have been raised but there was none. they even appeared to patronise us by watching some of our scenes especially when mega sets had been constructed. Maybe it was the technical fascination.”

When I commented on the friendship that may have grown between the Sinhala actors and actresses and the Tamil actors and actresses while on location, he had these observations to make:

“Yes. That too was a very significant outcome. In fact the ordinary couriers of peace are more effective than the official, superior activators of peace.”

The humble vendor carrying his goods for sale in the Tamil villages with a scarcity of essential goods, the homely Tamil woman offering water to a tired Sinhala traveller in the typical drinking vessel of the Jaffna peninsula in Dravidian damsel flashing a smile of welcome from her palmyra thatched hut by the seas on a Buddhist group of Nagadeepa pilgrims sailing by on a boat they perform the job of reconciliation more effectively, suggested Handagama.

The 13 episode “Take this road” (Me Paren Enna) is unique in another way. It has been produced subsequent to an unusual exercise that precedes a production of a typical Sri Lankan teledrama. The blurb on the drama puts it thus “Take this road was developed through a unique process of discussion and debate ensuring the representation of all the stake-holders of Sri Lanka’s peace process.”

It goes on to state that this provided an opportunity for “them” to express their own views and concerns about media treatment of conflict. among the participants at the discussion had been representatives from the community based, organizations in the North those working with displaced families, women’s groups based on border villages artists and writers and media practitioners.

A greater dimension had been added to the debate and discussion by the participation of three film directors, from India and South Africa who have already distinguished themselves by using the drama format to convey the magnitude of conflicts ending with that ugly syndrome called WAR and resultant social issues in their own countries, impinging mainly on innocent men and women who have had the least or zero responsibility for bringing about the disrupted and volatile situations.

It need not be reiterated that those actually responsible for the inflammatory situations created are finally the least affected as they cocoon themselves in their security sheaths and materially are quite well – off to resist any plunge unlike the poor who sit so precariously that a little tilt jut drops them into the cavern.

Some of the earlier privileged group even capitalize on the situation by profits from sale of firearms and other fraudulent activities that are spawned out of the war.

This social injustice accompanying the debacle of war is even more evil and unbearable than war itself.

by Padma Edirisinghe

2012 ஆம் ஆண்டில் அசோக ஹந்தங்கமவின் இனி அவன் திரைப்படத்தில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியாக நடித்தமைக்காக இவருக்கு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

இனி அவன் என்பது 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்த் திரைப்படம்.
இத்திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கிறார்.
முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழா 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012, எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது.

அது மட்டுமல்லாது ஜப்பானில் இடம்பெற்ற டோக்கியோ பன்னாட்டுத் திரைப்பட விழாவில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த திரைப்படமாக நடுவர் குழாமால் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் திரையரங்குகளில் 2012 டிசம்பர் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்டது.

இலங்கை சினிமா வரலாற்றில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் தமிழ். சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லாது எல்லா திரையரங்குகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை.

இனி அவன் திரைப்படம் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புனர்வாழ்வு முகாமிலிருந்து சமூகவாழ்க்கைக்கு திரும்பும் ஒரு முன்னாள் போராளியின் வாழ்க்கையினை மையமாக கொண்டு எடுக்கபட்டிருப்பது மாத்திரமலல்லாது யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையினையும் எதிர்காலத்தில் தமிழர்களின் மத்தியில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் மிகநுணுக்கமான முறையின் கூறிச்சென்றிருக்கிறது.

அத்தோடு முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் புனர்வாழ்வு தொடர்பாகவும் இந்த திரைப்படம் கேள்வியெழுப்புகின்றது.

Leave A Reply

Your email address will not be published.