பிக்பாஸ் சீசன் – 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன்- 6 அக்டோபர் 9 ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற ஆர்வமும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அசுர வேகத்தில் எகிறி வருகிறது.

இதற்கு முன்னதாக உத்தேச பட்டியலில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை வெளியாகியுள்ள பட்டியலானது கூடுதல் நம்பகத்தன்மையுடன் இருப்பதாகவும் இந்த லிஸ்டில் இருந்து தான் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இதில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான முக்கிய நட்சத்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சென்ற முறை பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜிபி முத்து இம்முறை நிச்சயமாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரை தவிர சின்னத்திரை கவர்ச்சி புயல் தர்ஷா குப்தா, வீஜே ரக்சன், மாடல் ராம்சந்தர், ராஜலெட்சுமி – செந்தில் தம்பதியினர், சினிமா நடிகை சில்பா மஞ்சுநாத், சீரியல் நடிகை ஆயிஷா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், வீஜே அர்ச்சனா, ஜாக்குலின், தீபா சங்கர், ஸ்ரீநிதி, வீஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், மகேஷ், அமுதவாணன், வீஜே கதிரவன், சீரியல் நடிகர் மணிகண்டன், வடசென்னை படத்தின் கானா பாடகர் வசந்த், மெட்டி ஒலி சாந்தி ஆகியோர் என உத்தேச பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும் மக்கள் போட்டியாளர்களாகவும் 6 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த லிஸ்டில் இருந்து எத்தனை பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர் என்பதை பிக்பாஸ் லாஞ்ச் எபிசோடில் தான் உறுதியாக தெரிந்துகொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.