புதிய ராணுவ தளபதியை நியமித்தது ரஷியா.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங்களை கைப்பற்றியதுடன் அதை தனதாக்கிக் கொண்டது. இந்த நிலையில் தற்போது போரில் உக்ரைன் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ரஷிய படைகள் சில ஆக்ரமிப்பு பகுதிகளில் இருந்து பின் வாங்கி வருகின்றன.

தெற்கில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் 2,400 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி உள்ளன. இது ரஷிய ராணுவத்திற்கு பின்னடவாக கருதப்படுகிறது. இந்நிலையில் ரஷியாவின் புதிய ராணுவ ஜெனரலாக செர்ஜி சுரோவிகின்னை நியமித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோயிகு உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் உடனான போரில் ஈடுபட்டுள்ள ரஷிய கூட்டுப் படைகளுக்கு செர்ஜி தலைமை தாங்கி வழி நடத்துவார் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷெகோவ் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக ரஷியாவின் கிழக்கு ராணுவ பிராந்திய தளபதியாக அவர் பணியாற்றினார் என்றும் சிரியாவுடனான போரில் ரஷிய ராணுவத்தினரை வழிநடத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.