யாழ்ப்பாணத்தில் பனங் கள் தேடி அலைந்த லொஹான் ரத்வத்த!

யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனங் கள்ளைப் பெறுவதற்கான வழிவகைகள் தனக்குக் கிடைக்கவில்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலகக் கட்டடம் கைதடியில் இன்று திறந்து வைக்கப்பட்டபோது, கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாக இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனங் கள்ளைத் தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனங் கள்ளு கிடைக்கவில்லை.

இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்திப் பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது.

பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும்.

45 வருடங்களாக வாடகை வீட்டில் செயற்பட்டு வந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்று சொந்தமானதொரு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.