யாழில் ஹெரோய்னுடன் இளம் தாய் சிக்கினார்!
ஊரெழு, அச்செழுப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளம் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதான இளம் தாயே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு 100 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை விற்க முயன்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.