காவல்துறைக்கு நன்றி : உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் கருணாஸ்!

பசும்பொன்னில் நடிகர் கருணாஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த நிலையில், மீண்டும் பெயர் பலகை அமைத்ததால் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வு இன்று நடைபெறுகிறது . இந்த நிகழ்வில் வருடம்தோறும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி அரசியல் பிரமுகர்கள், சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 10,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு அரசியல் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்களை வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திருவாடானை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிறுவனருமான கருணாஸ், தேவர் ஜெயந்தி விழாவில் அன்னதான பந்தல் அமைத்துள்ளார். அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் என்று பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றும் வைத்துள்ளார். இந்த கட் அவுட்டை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.

இதையடுத்து கட் அவுட்டை காவல்துறை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் பெயர் பலகை அமைத்ததால் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் விமான நிலைய” மாதிரி தோற்றம் அமைத்ததை “மதுரை 29.10.2022 அன்று அப்புறப்படுத்திய காவல் துறையை கண்டித்து பசும்பொன்னில் நான் சாகும் வரை உண்ணாவிரதத்தை (30.10.2022) இன்று அறிவித்திருந்தேன். ஆனால், காவல்துறையினர் அப்புறப்படுத்திய தேவரின் மதுரை விமான நிலைய மாதிரி அரங்கை உடனடியாக அதே இடத்தில் அமைத்துக் கொள்ள சரக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே எங்களது உணர்வை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு. உண்ணாவிரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.