சூப்பர் 12 சுற்று: முதல் தோல்வியை சந்தித்தது இந்தியா- தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென் ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 68, ரோஹித் சர்மா 15, விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்நிலையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.