ஒரு சில நடிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்கவில்லை ..!! இவருக்கு எதிராக நடக்கும் சதி வேலைகள் ..!! இப்படி கூட பண்ண முடியுமா ..??

தற்போது தமிழ்  சினிமா உலகில் ரசிகர்களின்  பேவ ரைட் நடிகராக இருந்து  வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  ஆரம்ப  கால கட்டங்களில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன்  படிப்படியாக  சினிமாவிற்குள் நுழைந்தார்.அப்படி மெரினா  என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

இதன் பிறகு தொடர்ச்சியாக  குடும்ப ரசிகர்களை கவரும் படங்களை  கொடுத்து வந்ததால் சிவகார்த்திகேயனுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். மேலும் சமீபத்தில்  சிவகார்த்திகேயனின்  நடிப்பில்  வெளியான டாக்டர் மற்றும் டான் போன்ற திரைப்படங்கள் நல்ல,விமர்சனங்களையும் பெற்றது.

அது மட்டு மல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல்  செய்து சாதனை படைத்தது.இப்படி சத்தமே இல்லாமல் உச்சத்தை நோக்கி பயணித்து வந்த நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு பெரிய அடியாக விழுந்தது தான் பிரின்ஸ் திரைப்படம்.

கடந்த தீபாவளிக்கு, தெலுங்கு  இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில்  வெளியான திரைப்படம் தான்  பிரின்ஸ். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா, சத்யராஜ் ,பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  மிகப் பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து  மோசமான விமர்சனத்தை  பெற்று வருகிறது.

இதனால் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்திக்க சிவகார்த்திகேயனுக்கு கதையே  தேர்வு செய்ய தெரியவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை அழிப்பதற்கு  தான் இப்படி கிளம்பிவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல், நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதற்காகவே  ஆள்வைத்து செய்து வருகிறார்கள் என்று  குண்டை தூக்கி போட்டுள்ளார் தனஞ்செயன் . அப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள மாவீரன், அயலான்  போன்ற  திரைப்படங்கள் நல்ல வரவேற்பை  கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave A Reply

Your email address will not be published.