அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டேக் ஆப். இவரது இயற்பெயர் கிர்ஷ்னிக் காரி பால். மிகோஸ் என்கிற பிரபல ராப் இசைக்குழுவை சேர்ந்த இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு தனது உறவுக்காரர் மற்றும் சக இசைக்கலைஞருடன் டேக் ஆப் சென்றார். அவர்கள் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து பகடைக்காய் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது விளையாட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மர்ம நபர் ஒருவர் ராப் பாடகர் டேக் ஆப்பை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே ராப் பாடகர் டேக் ஆப் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு ராப் இசைக்குழுவினர் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.