இம்ரான் கானைக் கொல்வதே எனது நோக்கம்:துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவரில்,ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மற்றைய நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரை கொல்லும் நோக்கில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ” இம்ரான்கான் மக்களை ஏமாற்றுகிறார், அந்தக் குற்றத்திற்கு மன்னிப்பு இல்லை” என்று சுட்ட நபர் கூறும் வீடியோ ஒன்று அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தக் கோரி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்ற போதே இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இது தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் இடம் பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் காலில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு , ஒருவர் கைத்துப்பாக்கியுடனும், மற்றொருவர் தானியங்கி துப்பாக்கியுடனும் என இரண்டு பேர் வந்துள்ளனர்.

இருவரில் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மற்றைய நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.