கடற்பரப்பில் உயிருக்கு போராடிய 303 இலங்கையர்கள் ஜப்பானிய கப்பல் மூலம் மீட்பு.

வியட்நாமுக்கு அருகேயுள்ள ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடலில் மீன்பிடி கப்பல் ஒன்றில் புலம் பெயரும் எண்ணத்தில் பயணித்த 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சென்ற மீன்பிடிக்கப்பல் சேதமடைந்து , நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று, மியான்மார் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்பட்ட லேடி R3 எனும் மீன்பிடி கப்பல் ஆபத்தில் இருப்பதாக ஏஜென்சிக்கு செய்தி கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் தேதி, தெற்கு கடற்கரையில் உள்ள Vung Tauவில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த போது , கடல் சீற்றத்தின் காரணமாக , அதன் என்ஜின் அறைக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளது.

வியட்நாம் கடல்சார் தேடல் மையம் கப்பலை தொடர்பு கொள்ள முயன்றதுடன், அருகிலுள்ள கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை அனுப்பியது.

அன்று மாலை 3 மணியளவு ஜப்பானியக் கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் , கடலில் மூழ்கும் ஆபத்தில் இருந்த படகு உள்ள பகுதியை கண்டறிந்ததுடன் , லேடி R3 கப்பலில் இருந்தவர்களை ஒரு மாற்றுப்பாதையில் சென்று மீட்கும்படி கோரியது.

அதன்பின் ஜப்பானிய கப்பலால் , பாதிக்கப்பட்ட கப்பலை அடைய முடிந்ததுடன், அதிலிருந்தவர்களை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.

வியட்நாம் கடல்சார் தேடல் மையம் மேலும் ஐந்து கப்பல்களைத் திரட்டி, தேவைப்பட்டால் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

மீட்கப்பட்ட மீன்பிடி கப்பலில் இருந்த 264 ஆண்களும், 19 பெண்களும் மற்றும் 20 குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) Vung Tau ஐ அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.