இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம்- ஷதாப் கான்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டேரியல் மிச்சேல் 35 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். ஷகீன்ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் பாபர் அசாம் 42 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி), முகமது ஹாரிஸ் 26 பந்தில் 30 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்) போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 2009-ல் கோப்பையை கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.