வில்லியர்ஸின் சிக்ஸர் மழையில் வென்றது பெங்களூரு ரோயல்.

கல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்சர் மழை பொழிந்த டிவிலியர்ஸ் 33 பந்தில் 73 ரன்கள் குவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக்கின் கல்கட்டாவை சந்தித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி தலைவர் கோஹ்லி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (32), பின்ச் ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது.அடுத்து பின்ச், கோஹ்லி இணைந்து, 9 முதல் 12 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இந்நிலையில் பின்ச் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.

டிவிலியர்ஸ், நாகர்கோட்டி ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி என 18 ரன்கள் விளாசினார். ரசல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டிவிலியர்ஸ், 23வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 36வது அரைசதம். கடைசி 5 ஓவரில் 83 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (33), டிவிலியர்ஸ் (73 ரன், 6 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய கல்கத்தா அணியை பான்டன் (8), ராணா (9), மார்கன் (8), தினேஷ் கார்த்திக் (1) கைவிட்டனர். சுப்மன் 34, ரசல் 16 ரன்கள் எடுத்தனர். கம்மின்ஸ் (1) கைவிட்டார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 112 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. பெங்களூரு சார்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் அதிகபட்சம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.