கட்டைக்காடு வீதி புனரமைப்பு கனரக வாகன சாரதி திடீர் சுகயீனம்.

யாழ்ப்பாணம் பருத்துத்துறை கட்டைக்காடு வீதி புனரமைப்பு பணியில் கனரக வாகன சாரதியாக பணியாற்றிய ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அவருடன் சுமார் 80 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பருத்தித்துறை – கட்டைக்காடு வீதியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகளில் கனரக வாகன சாரதியாக பணியாற்றும் ஒருவர் அண்மையில் தென்பகுதிக்கு சென்று திரும்பியிருந்த நிலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார். இதனையடுத்து அவரும், அவருடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் சுகயீனமடைந்தவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்றில்லை. என முடிவுகள் கிடைத்துள்ளதாக கூறியிருக்கும் வடமராட்சி கிழக்கு மருத்துவ அதிகாரி பணிமனை

மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை. என மருத்துவ அதிகாரி பணிமனை கூறியுள்ளது.

இதேவேளை வீதி அபிவிருத்தி பணிகள் யாவும் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.