எப்படியே ஒரு நாள் கைது செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியும்! – பொலிஸாரிடம் செல்வந்தி தெரிவிப்பு.
“நான் ஒரு நாள் கைது செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியும்” என்று இஷாரா செவ்வந்தி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போதே பொலிஸாரிடம் இஷாரா செவ்வந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
“நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டுக்குச் செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டுக்குச் செல்வேன் என்று இருந்தேன். ஆனால், நான் எனது நாட்டுக்குச் சென்றால் பொலிஸார் என்னைக் கைது செய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன்.” – என்றும் பொலிஸாரிடம் இஷாரா செவ்வந்தி கூறியுள்ளார்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
நேபாள அரசின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். அவருடன் ஜே.கே. பாய் உட்பட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரும் நேற்று நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படடைக்கப்பட்டுள்ளனர்.
