வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கருணாநாயக்க பொறுப்பேற்பு.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில், சம்பிரதாயபூர்வமான சர்வமத வழிபாடுகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.