இனி இந்த பாடல்களை ஒலிபரப்பினால் கடும் நடவடிக்கை.. FM சேனல்களுக்கு அரசு உத்தரவு

நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறார்கள் இடையே போதைப் பொருள் பழக்கமானது சமீப காலமாக தலைதூக்கியுள்ளது. இந்த பழக்கதை தூண்டுவதில் திரைப்படம், பொழுதுபோக்கு சார்ந்த ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு எஃப்எம் ரேடியோ சேனல்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ரேடியோ சேனல்களுக்கு பிறப்பித்துள்ள புதிய வழிகாட்டுதலில் , அனைத்து ரேடியோ சேனல்களும் இனி மது, போதைப்பொருள், ஆயுத கலாச்சாரம் ஆகியவற்றை பெருமை படுத்தும் விதமான பாடல்களையோ, இசைகளையோ அல்லது இவற்றை போற்றும் விதமான கன்டென்டுகளையோ ஒலிபரப்பக் கூடாது.

மீறி ஒலிபரப்பினால், GOPA ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்கு ஆளாகி அந்த சேனல்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது.சில எஃப்எம் சேனல்கள் போதை பழக்கத்தையும், துப்பாக்கி கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக பாடல்களை ஒலிபரப்பியது அரசின் கவனத்திற்கு வந்ததுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் திரைப்படம், காட்சி ஊடகம், பொழுதுபோக்கு ஊடகங்களில் போதை பழக்கம், வன்முறை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது போன்றவற்றை பெருமிதமாக காட்டும் வழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் முன்வைக்கப்படுகின்றன.குறிப்பாக இது போன்ற தவறான கருத்துக்கள் சிறார்கள், இளம் தலைமுறையினர் மனதில் பதிந்து தவறான வழிக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.