இந்தியாவில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் இலங்கை.

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20-20 கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான இறுதிப் போட்டி இன்று (7) நடைபெறவுள்ளது.

ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்க உள்ள இதில் வெற்றி பெறும் அணி போட்டி தொடரில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது 20-20 போட்டியில் இலங்கை அணி இரண்டு ரன்களால் தோல்வியடைந்ததுடன், இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்களால் வெற்றிபெற்றது.

அதன்படி, வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் இருதரப்பு போட்டியை வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி உயர் மனநிலையில் இன்று களமிறங்குகிறது.

முன்னதாக, இலங்கை அணி இந்தியாவில் 5 டி20 தொடர்களில் விளையாடியது, அந்த 5 தொடர்களில், 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி கடைசியாக 2019-ல் தங்கள் நாட்டில் டி20 தொடரை இழந்தது. அந்த ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20-20 தொடரை 2-0 என இழந்தது. அந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து 11 தொடர்களில் 20-20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், அந்த சாதனையை முறியடிக்க இலங்கைக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளிடமும் அதிக மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது, ஆனால் பானுக ராஜபக்ச அல்லது தனஞ்சய டி சில்வா அணியில் இடம் இழக்க வாய்ப்பு உள்ளது.

இதன்படி, நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக்கில் திறமையை வெளிப்படுத்திய அவிஷ்க பெர்னாண்டோ அல்லது சதீர சமரவிக்ரம ஆகியோரை அணியில் இணைய வாய்ப்புள்ளது.

ராஜ்கோட் ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் பொருத்தமான ஆடுகளமாக கருதப்படுகிறது, எனவே இன்றைய போட்டியிலும் அதிக ஸ்கோர்கள் பதிவாக வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தின் வரலாறு ரன்களை துரத்தும் அணிக்கு சாதகமாக இருப்பதால், டாஸ் வென்ற அணி கேப்டன்கள் பந்துவீச முடிவு செய்யும் வாய்ப்பு அதிகம்.

ராஜ்கோட் இன்று மதியம் மழையால் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மதியம் 17 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

எதுஎவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கை அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்கப்படைகிறது.

Leave A Reply

Your email address will not be published.