வீடே உங்கள எதிர்த்து நின்னப்ப.. தனி ஆளா இருந்து மிரட்டி விட்டீங்க..அசீமை புகழ்ந்த பிக்பாஸ்.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி இன்றுடன் 102 நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. மீதம் 4 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ADK வெளியேற்றப்பட்ட நிலையில் 6 போட்டியாளர்களுடன் மீதம் இருக்கும் நாட்கள் நடைபெற்று வந்தது. இந்த வாரம் நடந்த பெட்டி டாஸ்கில் கதிரவன் 3 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார். மீதம் இருக்கும் ஐந்து பேரை பைனலுக்கு அனுப்ப பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது.

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களும் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் தற்போது ஆறு போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அமுதவாணன் நேரடி பைனலுக்கு சென்று இருக்கும் நிலையில் மீதம் இருக்கும் 5 பேரில் நான்கு பேரை மட்டும் ஃபைனலிஸ்டாக தேர்வு செய்ய பிக்பாஸ் திட்டமிட்டு இருக்கிறது.

கடந்த வார நாமினேஷனில் அமுதவாணனை தவிர அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ஷிவின் என மொத்தம் ஆறு பேர் நாமினேட் ஆகியிருந்தனர். மேலும் எலிமினேட் ஆகி சென்ற அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்கு உள்ளே அனுமதித்திருக்கின்றனர். இன்னும் ஆயிஷா, ரட்சிதா, ஜனனி ஆகிய மூன்று பேர் மட்டும் உள்ளே வரவில்லை.

உள்ளே வந்த போட்டியாளர்கள் வீட்டில் இருப்பவர்களை ட்ரிகர் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் சாக்ரிபைஸ் டாஸ்க் என்ற பெயரில் அவர்கள் கொடுத்த சில டாஸ்க்குகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மீசையை எடுக்க சொல்லுவது, தலையை பாதியாக மொட்டை அடித்துக் கொள்ளச் சொல்வது என்று உள்ளே வந்த போட்டியாளர்களின் டாஸ்க்கள் வன்மம் நிறைந்ததாக இருந்ததாக வெளியில் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வந்த நிலையில், ஏடிகே வெளியேறினார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த 100 நாட்களில் நடந்த அனைத்து டாஸ்க்கையும் ஞாபக படுத்தும் விதமாக பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். அசீமை நிற்க வைத்து அவரிடம் பிக்பாஸ் சில விஷயங்களை கூறுகிறார். அதை கேட்ட அசீம் கண்கலங்கி அழுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.