மின்கட்டண அதிகரிப்புக்கு முட்டுக்கட்டை போடுவதால் ஜனக ரத்நாயக்க நீக்கம்?

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க விடாமல் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தடையாக இருப்பதால் அவரை அந்தப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது.

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை நீக்குவதற்கான யோசனையை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அரசின் யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அந்த மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனக ரத்நாயக்க தெரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.