ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் இராஜினாமா.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜினாமா கடிதங்களை கையளித்ததாகவும், 85 விமானிகள் விமான போக்குவரத்து அதிகாரசபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானி ஒருவர் மாதாந்த சம்பளமாக $10,000 பெறுகிறார், ஆனால் டாலர் மதிப்பு 225 ரூபாய் என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது, மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் பைலட் $30,000 முதல் $40,000 வரை வரியில்லா சம்பளம் பெறுகிறார் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் சுமார் 240 விமானிகள் பணிபுரிவதாகவும், சுமார் 80 விமானிகள் வெளியேறினால், இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் விமான சேவை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், கடந்த டிசம்பர் மாதம் முதல் டொலர் ஒன்று , 295 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.