ஆஸ்திரேலிய ஓபன் 22-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 5-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெ லாரஸ்)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதினார்கள். இதில் ஷப லென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கிராண்ட்சிலாம் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 4-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா)-தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர்.

டென்னிஸ் போட்டியில் அதிக கிராண்ட்சிலாம் வென்றவர் ரபெல் நடால். ஸ்பெயினைச் சேர்ந்த 36 வயதான அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் அவர் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

ஜோகோவிச் 21 கிராண்ட்சிலாமுடன் 2-வது இடத்திலும், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாமுடன் 3-வது இடத்திலும் இருந்தனர். இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும்போது மேலும் ஒரு சாதனையாக, அவர் 10 மற்றும் அதற்கு மேல் வென்ற 3வது நபர் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்பட்டது. மேற்கூறியபடி, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரமாக வெற்றிப்பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.